Friday, June 20, 2008

நான் உலவுகிறேன

எனது தனிமைகள் கழிகின்றன
யாரும் இல்லா இனிமைகளாக..
நினைவுகளின் சில பல மர்மங்கள்
நிகழ்வுகளாக தொடர்கின்றன.
வர்ணங்கள் இல்லா வெண்மையாக நான் உலவுகிறேன்
எனது மர்மப் பாதைகள் விலகுகின்றன
தெளிந்த நீரோட்டையில் எனது பாவங்கள் தொலைகின்றன.

பிரிவுகள்

நண்பர்களின்..
ஒரு கன நிகழ்வுகள் தினமும்
தொலைந்தவைகளாக மீண்டு வருகின்றன.

என் இருமனக்கண்களிலும் நித்திரைக் கனவுகளாக
காண்கிறேன் ...



என் மனதில் வருடங்கள் பல கழிந்தாலும்
உன்னைச் சந்தித்த அந்த சில நாள்கள்
என்னில் நிரந்தரமாக என்றும் இருக்கும் நீ இல்லாமலும்...

நண்பர்கள் என்னை மறந்தாலும் பிரிந்தாலும்
அவர்கள் அழித்த நட்பு பிரியவில்லை ...