பூந்தோட்டங்களிலுள்ள ஆயிராமாயிரம்
பூக்களில் நீ மட்டும் தனியே..
நான் தினமும் உன்னை தேடும்
பட்டாம்பூச்சியாக..
பின்பனிக்கால பனித்துளிகள்
மண்ணில் மறைகின்றன..
நீயும் அறைநிலாவாக தேய்ந்து
உலகை வலம் வந்து
மீண்டும் வளர்கிறாய் என்னில்..
பனிக்கால முகில்கள்
என்னை சுற்றுகின்றன
உன்னை மறைத்து..
இலைகளில் பனித்துளிகள்
சிதறி..
உன்னை காண்கிறேன்