அந்த நாள்
அதிசயம் அவள்...
சப்தம் இல்லாமல்
சந்தங்கள் இல்லை
உன் புன்னகை இல்லாமல்
நீ இல்லை.
கவனங்கள் சிதறுகின்றன
நீ பார்க்காத பார்வையால்..
எனது பாடங்கள் படமாகின்றன
உன் திகட்டாத சிரிப்பால்...
உன்னுள் வாங்கும் ஒளியை
நானே வெளியிடுகிறேன்
நடுநிசியில் உன்னைத் தேட..
உன்னை பார்த்ததில்
நான் பூவுலகில்
பார்க்க மறந்த நிகழ்வுகள் பல..
Tuesday, June 30, 2009
தலைப்புகள் இல்லாத கவிதைகள்
உன் கனிப்பான (கனிவான) பேச்சில்
என் கவனங்களை சிதறடிக்கிறாய்...
உன் கற்கண்டு பேச்சில்
கல்மணம் கரைக்கிறாய்..
உன் புன்சிரிப்பில் என் உள்ளம்
திசைமாறுகிறது.
எனது எழுத்தில்
நீ உயிர் என்றால்
நான் மெய்யாக..
எனது கற்பனையில் நீ என்றால்
என் உள்ளங்களில் பருவக்காற்றாக..
குயில் ஒசையாக என் மனதிலும்
தெருக்களிலும் வண்ணக்கோலங்கள்
இட்டு சென்று விட்டாள்..
என் கவனங்களை சிதறடிக்கிறாய்...
உன் கற்கண்டு பேச்சில்
கல்மணம் கரைக்கிறாய்..
உன் புன்சிரிப்பில் என் உள்ளம்
திசைமாறுகிறது.
எனது எழுத்தில்
நீ உயிர் என்றால்
நான் மெய்யாக..
எனது கற்பனையில் நீ என்றால்
என் உள்ளங்களில் பருவக்காற்றாக..
குயில் ஒசையாக என் மனதிலும்
தெருக்களிலும் வண்ணக்கோலங்கள்
இட்டு சென்று விட்டாள்..
Monday, August 25, 2008
பூந்தோட்டம்
பூந்தோட்டங்களிலுள்ள ஆயிராமாயிரம்
பூக்களில் நீ மட்டும் தனியே..
நான் தினமும் உன்னை தேடும்
பட்டாம்பூச்சியாக..
பின்பனிக்கால பனித்துளிகள்
மண்ணில் மறைகின்றன..
நீயும் அறைநிலாவாக தேய்ந்து
உலகை வலம் வந்து
மீண்டும் வளர்கிறாய் என்னில்..
பனிக்கால முகில்கள்
என்னை சுற்றுகின்றன
உன்னை மறைத்து..
இலைகளில் பனித்துளிகள்
சிதறி..
உன்னை காண்கிறேன்
Tuesday, August 12, 2008
நவீன ஆத்திசூடி
நவீன ஆத்திசூடி
அன்றே மற
ஆங்கிலம் கல்
இந்தநாள் நல்ல நாள்
ஈகை கொடு
உள்ளம் பேசும்
ஊஞ்சலில் விளையாடு
எல்லொரும் நல்லவர்கள்
ஏணிகள் ஏராளம்
ஐவரை நினை வாழ்க்கையில்
ஒடு முன்னேற
ஓம்பல் [ விருந்தோம்பல்]
Saturday, July 5, 2008
ஒவ்வொரு மனிதர்களுக்குள்
- பாசமும் கோபமும் ஒவ்வொரு மனிதர்களின் இருபக்கங்கள்..
- ஒவ்வொரு மனிதர்களுக்குள் ஒராயிரம் கனவுகள் புதைந்து கிடைக்கின்றன.
- ஒவ்வொரு மனிதர்களுக்குள் இருவேறு மனங்கள் ஒன்று ஆண்காவும் ஒன்று பெண்ணாகவும் உள்ளன.
- ஒவ்வொருவரும் தான் நேசித்த யாராவது ஒருவரைத் தொலைத்தவர்களாகத்தான் இருக்கிறார்கள்.
Friday, June 20, 2008
நான் உலவுகிறேன
எனது தனிமைகள் கழிகின்றன
யாரும் இல்லா இனிமைகளாக..
நினைவுகளின் சில பல மர்மங்கள்
நிகழ்வுகளாக தொடர்கின்றன.
வர்ணங்கள் இல்லா வெண்மையாக நான் உலவுகிறேன்
எனது மர்மப் பாதைகள் விலகுகின்றன
தெளிந்த நீரோட்டையில் எனது பாவங்கள் தொலைகின்றன.
பிரிவுகள்
நண்பர்களின்..
ஒரு கன நிகழ்வுகள் தினமும்
தொலைந்தவைகளாக மீண்டு வருகின்றன.
என் இருமனக்கண்களிலும் நித்திரைக் கனவுகளாக
காண்கிறேன் ...
என் மனதில் வருடங்கள் பல கழிந்தாலும்
உன்னைச் சந்தித்த அந்த சில நாள்கள்
என்னில் நிரந்தரமாக என்றும் இருக்கும் நீ இல்லாமலும்...
நண்பர்கள் என்னை மறந்தாலும் பிரிந்தாலும்
அவர்கள் அழித்த நட்பு பிரியவில்லை ...
ஒரு கன நிகழ்வுகள் தினமும்
தொலைந்தவைகளாக மீண்டு வருகின்றன.
என் இருமனக்கண்களிலும் நித்திரைக் கனவுகளாக
காண்கிறேன் ...
என் மனதில் வருடங்கள் பல கழிந்தாலும்
உன்னைச் சந்தித்த அந்த சில நாள்கள்
என்னில் நிரந்தரமாக என்றும் இருக்கும் நீ இல்லாமலும்...
நண்பர்கள் என்னை மறந்தாலும் பிரிந்தாலும்
அவர்கள் அழித்த நட்பு பிரியவில்லை ...
Subscribe to:
Posts (Atom)