Thursday, June 18, 2015

மரம்

மழை தேவையெனில் மரமும்  தேவை
மரம் மண் மனிதம்
இல்லையெனில்
இவ்வுலகம்  இல்லை

மதம் வளர்ப்பதை விட்டு விட்டு
மரம் வளர்ப்போம்
நாட்டு  நலம் பெருகும்

உரம் - 1

மரம் உங்களைப் பார்த்து சிரிக்கிறது 
தன் இலைகளில்... 
வெட்டும் நீங்கள் 
எனக்கு உரமாவீர்கள் என்று....

R.K நகரில்

என்ன கொடுமை! R.K நகரில் இறந்தவர்களுக்கூட ஓட்டு போடச்சொல்லி பணம் கொடுக்கிறார்கள். இவர்களுக்கு தெரிவதில்லை அக்கிராமம் பார்க்காமல் இருக்கத்தான் இயற்கை ஏய்தினார்கள் என்று....

Tuesday, June 16, 2015

கடவுளும் கந்தசாமியும்

யாரும் கடவுளாக பிறப்பதில்லை
உலக நிகழ்வுகளால் கந்தசாமியும் கடவுளாக மாறாலாம்...

யார் அந்த கந்தசாமி !!! தேடுகிறேன்...

தேடல் இன்றியா வாழ்வின் அத்தியாவசிய தேவைகள்...

தேடல்களின் முடிவில் நல்வாழ் கடமைகள் காத்து கிடக்கின்றன.
முடிவுகள் இனிமையானதாக அமையா தேடுங்கள்...

ஒவ்வொரு மனிதர்களிடம் உள்ள நல்ல உள்ளங்களே கடவுள்கள்...

உரம்

மனிதர்களுக்குத் தெரிவதில்லை 
நாம் உரமாவோம் மரங்களுக்கென்று .....
 மரங்களை வெட்டுகிறார்கள்

Friday, January 23, 2015

தேடல்

தேடல்கள் இருக்கும் வரை இவ்வுலகில் மாற்றங்கள் இருக்கும் என்று சொல்லுகிறார்கள் மாற்றங்கள் நடக்கும் வரை நான் இருப்பேன் என்று தெரிவதில்லை இருந்தும் தேடுகிறேன்! தொலைந்து போன பழைய வாழ்க்கையை..!!

Tuesday, September 17, 2013

நிலவு

பால்வெளியில் உன்னைப் பார்த்தேன். 
நேரில் பார்க்க ஆவல்.. 
ஒரு லட்சம் ஒளியாண்டுகள் வேண்டும் என்று தகவல். 
அன்றுவரை இருப்பேன் என்று தெரியவில்லை... 

இங்கிருந்து அதிவேக தொலை நோக்கி வழியாகக் காண்கிறேன். 
உன் முப்பரிணாம பிம்பங்களைப் புகைப்படமாகக் காண்பியாக... 

நீ இரவின் குளிமை.. 
பகலில் மறைபவள் இரவில் ஒளிர்பவள் 
உன்னைக் காண சந்திரயான் வருகிறது... 
விரைவில் உன்னைச் சந்திப்பேன்...