Tuesday, April 29, 2008

மழலை முகம்


உனது ஆறுநாள் புன்னகை
என் இருதயத்தின் ஒரு சிறு கீரல்..


நீ பேச முடியாத மௌனங்கள்
என்னுள் இன்னிசையாக..


உனது அழுகுரல்
என் மனதின் பிரதிபலிப்பு..


உனது மெல்லிய சிரிப்பு
எந்தன் ஜீன்களின் பரவசம்.

இனி...

இனி ஒரு சிந்தனை செய்வோம் 
உலகமக்களுக்கு ஒருவேளை 
உணவு கிடைக்கவேண்டுமென்று. 

இனி ஒன்று நினைப்போம் 
உலகில் உள்ள கடவுள்களும் மனிதர்களும் 
ஒன்றே என்று. 

இனி ஒன்று யோசிப்போம் 
உலகில் இயற்கையை அழிக்காமல் 
இருப்போம் என்று. 

இனி ஒன்று நினைப்போம் 
உலகில் மாற்றங்கள் நிகழ நாமும் 
காரணம் என்று. 

இனி ஒன்று நம்புவோம் 
உலகில் போர்கள் 
நிகழ கூடாதுதென்று. 

இனி ஒரு எண்ணம் எண்ணுவோம் 
உலகத்தில் அமைதி 
நிகழ வேண்டுமென்று

Friday, April 18, 2008

தனிமை




தனிமை
கருவறையிலும் கல்லறையிலும்
நீ இல்லாமல் தற்பொழுதும்..

காதல்..
தனிமையை கொண்டாட வரும் இனிமை...

நீ இருக்கும் பொழுது தெரியாத உனது நேசங்கள்
நீ இல்லாமல் இருக்கும் தனிமையில் மையல் இடுகின்றன.....

தனிமையை நான் கற்கிறேன்
எனது தோழர்கள் சந்திக்கவும் பிரியவும்...


தொடர்ந்து தோழர்கள் சேர்கிறார்கள் பிரிகிறார்கள்
நான் மட்டும் தனியே....

என்னை விட்டு எல்லோரும் பிரிகிறார்கள்
தனிமை மட்டும் என்னை பிரியாமல் தொடர்கிறது...

எனது அழுகுரல் ரீங்காரமாக என் மனதில் அழுந்த பதிகிறது
நான் அழுகிறேன் தனியே!
யாருக்கும்
தெரியாமல்...