Friday, April 18, 2008

தனிமை




தனிமை
கருவறையிலும் கல்லறையிலும்
நீ இல்லாமல் தற்பொழுதும்..

காதல்..
தனிமையை கொண்டாட வரும் இனிமை...

நீ இருக்கும் பொழுது தெரியாத உனது நேசங்கள்
நீ இல்லாமல் இருக்கும் தனிமையில் மையல் இடுகின்றன.....

தனிமையை நான் கற்கிறேன்
எனது தோழர்கள் சந்திக்கவும் பிரியவும்...


தொடர்ந்து தோழர்கள் சேர்கிறார்கள் பிரிகிறார்கள்
நான் மட்டும் தனியே....

என்னை விட்டு எல்லோரும் பிரிகிறார்கள்
தனிமை மட்டும் என்னை பிரியாமல் தொடர்கிறது...

எனது அழுகுரல் ரீங்காரமாக என் மனதில் அழுந்த பதிகிறது
நான் அழுகிறேன் தனியே!
யாருக்கும்
தெரியாமல்...

No comments: