Tuesday, June 30, 2009

கவிதைகளில்

விட்டு விட்டு பெய்த மழையில்
என் நெஞ்சை தொட்டு விட்டு
சென்று விட்டாள்..


என்
கவிதைகளில்
நான் நீ மட்டும்..
எப்பொழுது நாம் ஆவோம்
நம்
கவிதைகளில்..


காதலிக்கத்தான் நினைக்கிறேன்
உன் மறைவில்
விரும்புகிறேன் என்றேன்
என் கனவுலகில்..

கார்கால மேகக்கூட்டங்கள்
வானில் வான்வில்லாக...
என்னில் பெய்யென பெய்யும்
மழையாக நீ...


என்னில் காதல் கவிதையில்!!
சப்தமில்லா உலகில் என் காதல்
கனவுகளாக..

கவிதையில் என்னில்
பல மாற்றங்களாக நீ!!
நேரில் பார்க்கமுடியாத கனவுகளாக..

நீ இல்லாமல்..

அந்த நாள்
என்னிடம் எதுவும் இல்லை
உனக்கு கொடுக்க!
ஆனால் தற்பொழுது எல்லாம் இருக்கிறது
நீ இல்லாமல்!

->->->->->->->->->->->->->->->->->->->->->->->->

நான் காணும் நடுநிசி நிலவும்
சுடுகிறது நீ இல்லாமல்..

->->->->->->->->->->->->->->->->->->->->->->->->

என் இளமைக்காலம் இப்படியே போய்விடும்
என்ற அச்சம் நீ இல்லாமல்..

->->->->->->->->->->->->->->->->->->->->->->->->

நீ இல்லா இனிமையான இளமை
முதுமையானதாக தெரிகிறது..

மலர்க்கவிதைகள்

என் குளிர்காலக் கனவுகள்
மறைகின்றன
நிகழ்கால நிஜங்களில்..
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
சிறு இடைவெளிகளில் உன்னை
காண்கிறேன்.
உன் இருகண்களில்
என்னை இழுக்கிறாய்..

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
உன் மலர்முகம் என்னை
மாற்றுகின்றன
என்னையறியாமல்..
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

சன்னல் முற்றத்தின் அறை
நிலா வெளிச்சம்
என் மனத்திரையில்
உன் மலர்முகம்..

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

என் மனதில் முழுமதியின்
வெளிச்சமாக நீ தான்..
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
உன்னைப் பார்க்கையில்
தெரியாத கவிதைகள்
உன்னை நினைக்கையில்
வருகின்றன
என் மனமறியாமல்...

பிப்ரவரி மாதக்கவிதைகள்

அந்த நாள்
அதிசயம் அவள்...


சப்தம் இல்லாமல்
சந்தங்கள் இல்லை
உன் புன்னகை இல்லாமல்
நீ இல்லை.



கவனங்கள் சிதறுகின்றன
நீ பார்க்காத பார்வையால்..
எனது பாடங்கள் படமாகின்றன
உன் திகட்டாத சிரிப்பால்...

உன்னுள் வாங்கும் ஒளியை
நானே வெளியிடுகிறேன்
நடுநிசியில் உன்னைத் தேட..

உன்னை பார்த்ததில்
நான் பூவுலகில்
பார்க்க மறந்த நிகழ்வுகள் பல..

தலைப்புகள் இல்லாத கவிதைகள்

உன் கனிப்பான (கனிவான) பேச்சில்
என் கவனங்களை சிதறடிக்கிறாய்...

உன் கற்கண்டு பேச்சில்
கல்மணம் கரைக்கிறாய்..

உன் புன்சிரிப்பில் என் உள்ளம்
திசைமாறுகிறது.

எனது எழுத்தில்
நீ உயிர் என்றால்
நான் மெய்யாக..

எனது கற்பனையில் நீ என்றால்
என் உள்ளங்களில் பருவக்காற்றாக..


குயில் ஒசையாக என் மனதிலும்
தெருக்களிலும் வண்ணக்கோலங்கள்
இட்டு சென்று விட்டாள்..