Tuesday, June 30, 2009

கவிதைகளில்

விட்டு விட்டு பெய்த மழையில்
என் நெஞ்சை தொட்டு விட்டு
சென்று விட்டாள்..


என்
கவிதைகளில்
நான் நீ மட்டும்..
எப்பொழுது நாம் ஆவோம்
நம்
கவிதைகளில்..


காதலிக்கத்தான் நினைக்கிறேன்
உன் மறைவில்
விரும்புகிறேன் என்றேன்
என் கனவுலகில்..

கார்கால மேகக்கூட்டங்கள்
வானில் வான்வில்லாக...
என்னில் பெய்யென பெய்யும்
மழையாக நீ...


என்னில் காதல் கவிதையில்!!
சப்தமில்லா உலகில் என் காதல்
கனவுகளாக..

கவிதையில் என்னில்
பல மாற்றங்களாக நீ!!
நேரில் பார்க்கமுடியாத கனவுகளாக..

No comments: